Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இன்றுடன் நிறைவடையும் ‘குளோபல் வில்லேஜ்’ கண்காட்சி

In வணிகம்
Updated: 05:10 GMT, Apr 9, 2016 | Published: 05:10 GMT, Apr 9, 2016 |
0 Comments
1257
This post was written by :

டுபாயில் ஒவ்வொரு வருடம் நடைபெறும் ‘குளோபல் வில்லேஜ்’ கண்காட்சி இன்று (சனிக்கிழமை) இரவுடன் நிறைவடையவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன் மூலம் 160நாட்கள் கலை கட்டி இருந்து வண்ண மயமான நிகழ்வுகள் இன்றுடன் முடிவடைகின்றது.

இம்முறை இடம்பெறும் ‘குளோபல் வில்லேஜ்’ கண்காட்சி 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3ஆம் திகதி ஆரம்பமாகியது. இந்நிலையில் இன்றுடன் நிறைவடையும் இக்கண்காட்சி சுமார் 160 நாட்கள் இடம்பெற்றுள்ளது.

இவ்வருடத்திற்கான ‘குளோபல் வில்லேஜ்’ கண்காட்சியில் 75 நாடுகளுக்கும் அதிகமானர்கள் பங்கேற்றுள்ளனர். அவர்கள் சர்வதேச ளெவில் உள்ள சுற்றுலா பார்வையாளர்களை கவரும் வகையில், தமது நாட்டின் கலை மற்றும் கலாச்சாரத்தை நினைவு கூறும் வகையில் பல வகையிலான அரங்குகளை அமைத்திருந்தனர்.

அங்கு குழந்தைகளுக்கான பல்வேறு விளையாட்டு அரங்குகள், கலை கலாசார நிகழ்வுகள், உலக புகழ்பெற்ற சின்னங்களின் மாதிரி வடிவங்கள், உட்பட இன்னும் பல முக்கிய அம்சங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg