Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இன்று புதிய குருக்களாக திருநிலைப்படுத்தப்பட்ட 14 தியாக்கோன்கள்

In ஆன்மீகம்
Updated: 10:08 GMT, Apr 9, 2016 | Published: 10:08 GMT, Apr 9, 2016 |
0 Comments
1250
This post was written by :

கொழும்பு உயர் மறைமாவட்டத்தைச் சேர்ந்த 14 தியாக்கோன்கள் இன்று (சனிக்கிழமை) காலை புதிய குருக்களாக திருநிலைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களைத் திருநிலைப்படுத்தும் நிகழ்வு கொழும்பு, கொட்டாஞ்சேனை புனித லூசியாள் பேராலயத்தில் கர்தினால் மல்கம் றஞ்சித் ஆண்டகையின் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது, நீர்கொழும்பைச் சேர்ந்த கிஹான் பிரியசாந்த பீரிஸ், மோதரயைச் சேர்ந்த றெக்ஸ் வின்சன்ட் ஜெயசீலன், பமுனுகமவைச் சேர்ந்த நிக்லஸ் பிரசங்க ரொட்றிகோ, போப்பிட்டியைச் சேர்ந்த சமித் குமார பெரேரா, நீர்கொழும்பைச் சேர்ந்த ஜெரால்ட் கிறிஸ்டி வோள்ட்ப் பெரேரா, தெய்யகாத்தவைச் சேர்ந்த ருவன் தாரக்க அல்விஸ், வெயாங்கொடவைச் சேர்ந்த ஷெமன் விக்கிரமசிங்க, ராகமவைச் சேர்ந்த நொயெல் ஷானக்க தில்ஹார மென்டிஸ் ஆகிய தியாக்கோன்கள் இன்று கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் புதிய குருக்களாக திருநிலைப்படுத்தப்பட்டனர்.

அதேபோன்று கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த பேர்னாட் பிரபாத் இன்பராஜன், நிட்டம்புவைச் சேர்ந்த நுவான் சத்துரங்க பெரேரா, குருணாகலைச் சேர்ந்த பிலிஷியன் நிசல் மதூஷன, களஎலியைச் சேர்ந்த ஹர்ஷ தினேத் ராஜகருணா, வெலிகம்பிட்டியைச் சேர்ந்த ரசிக்க திலுஷான் பெரேரா, ஏத்துக்காலவைச் சேர்ந்த சஷிக்க மனோஜ் ரொட்றிகோ ஆகிய தியாக்கோன்களும் இன்று காலை கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் புதிய குருக்களாக திருநிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப் பிடத்தக்கது.

இவர்கள் அனைவரும் கொட்டாஞ்சேனை புனித லூசியாள் பேராலயத்தில் கர்தினால் மல்கம் றஞ்சித் ஆண்டகையினால் புதிய குருக்களாக திருநிலைப்படுத்தப்பட்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg