Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உள்ளத்தை தூய்மையடையச் செய்யும் குர்ஆன்

In ஆன்மீகம்
Updated: 11:30 GMT, Apr 9, 2016 | Published: 11:26 GMT, Apr 9, 2016 |
0 Comments
1250
icon_com
This post was written by :
Quran

மனித சமுதாயத்திற்கு வழிகாட்டியாக வந்த திருமறை குர்ஆன் இறைவன் அருளிய சிறந்த வழிகள் அத்தனையையும் குறிப்பிட்டுள்ளது. அந்தத் திருமறைகள் ஒரே புத்தகமாக ஒரே நாளில், ஒரே தருணத்தில் இறைவனிடமிருந்து அருளப்பட்டதல்ல. வெவ்வேறு தருணங்களில் வாழ்க்கையின் கேள்விகளுக்குப் பதிலாக அருளப்பட்ட இறை வசனங்கள், பின்பு முழு நூலாக்கப்பட்டது.

புனித நூலின் ஒவ்வொரு வசனமும் முகமது (ஸல்) அவர்களுக்கு இறை அறிவிப்பாக (வஹி) வானவர் ஜிப்ரீல் (அலை) மூலம், நபிகளாரின் நாற்பதாவது வயது முதல் அவர் இறக்கும் வரை 23 வருடங்கள் இறை அறிவிப்பாக அருளப்பட்டது.

அவை பலராலும் மனனம் செய்தும், எழுதியும் பாதுகாத்து வைக்கப்பட்டு, நபி (ஸல்) அவர்களுக்கு பிறகு அபூபக்கர் (ரலி) ஆட்சி காலத்தில் திரட்டப்பட்டது. எனினும், அது உஸ்மான் (ரலி) ஆட்சிக் காலத்தில்தான் முழுமையாக்கப்பட்டது.

அதில் மொத்தம் 114 சூராக்கள் உள்ளன. ஓவ்வொரு சூராவுக்கும் வெவ்வேறு தலைப்புகள் உள்ளன. குர்ஆனின் மூலம் நாம் அந்தக் காலகட்டத்தில் நிகழ்ந்தவற்றை அறிந்து கொள்ள முடிவதோடு, அப்போதிருந்த கலாச்சாரத்தைப் பற்றியும் உணர்ந்து கொள்ள முடிகிறது.

உள்ளத் தூய்மைக்கும் ஆத்மாவின் ஆரோக்கியத்திற்கும் திருக்குர்ஆனை தினமும் ஓதி வருவது மிக முக்கியமாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg