Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நண்டு ஃப்ரை

In
Updated: 03:58 GMT, Apr 10, 2016 | Published: 03:57 GMT, Apr 10, 2016 |
0 Comments
1202
icon_com
This post was written by : Shailu
crab fry

தேவையான பொருட்கள் 

சதைக் கொண்ட நண்டு – 4
எலுமிச்சை சாறு – பாதி பழம்
மஞ்சள் தூள் – ¼ தேக்கரண்டி
பூண்டு விழுது – ¼ தேக்கரண்டி
மிளகுத்தூள் – ¼ தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – ½ – 1 தேக்கரண்டி
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

செய்முறை 

நண்டை நன்றாக கழுவி சுத்தம் செய்த பிறகு நண்டுடன் மிளகாய்த் தூள், மிளகுத் தூள், மஞ்சள் தூள், பூண்டு விழுது, தேவையான உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து பிசறி ஊற வைக்கவும்.

அடுப்பில் நான்ஸ்டிக் பாத்திரத்தை வைத்து ஒரு மேசைக்கரண்டி எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் மசாலாவுடன் சேர்த்து பிரட்டி ஊற வைத்திருக்கும் நண்டை போட்டு முன்னும் பின்னுமாக பிரட்டு, மூடி போட்டு இரண்டு பக்கமும் நன்றாக வேகும் வரை வதக்கி வெந்ததும் இறக்கி பரிமாறவும். தற்போது சுவையான நண்டு ஃப்ரை ரெடி.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg