Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியாவில் வாகன காப்புறுதித் தொகை அதிகரிப்பு

In வணிகம்
Updated: 08:35 GMT, Apr 10, 2016 | Published: 08:22 GMT, Apr 10, 2016 |
0 Comments
1190
icon_com
This post was written by :
insurance

இந்தியாவில் ஏப்ரல் முதலாம் திகதியில் இருந்து கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களுக்கான காப்புறுதி தொகை 40 சதவீதத்தினால் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த முடிவு இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, 1,000 சிசி வரையிலான சிறிய கார்களுக்கான மூன்றாம் தர மோட்டார் காப்புறுதித் தொகையான ஏற்கனவே இருந்த 1,468 ரூபாய், 39.9 சதவீதத்தினால் அதிகரித்து 2,055 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோன்று, 1,000 முதல் 1,500 சிசி வரையிலான கார்களுக்கான காப்புறுதித் தொகையும் 40 சதவீதத்தால் உயர்த்தப்பட்டுள்ளது. 1,500 சிசிக்கு மேற்பட்ட பெரிய கார்கள், எஸ்.யூ.வி.க்களுக்கான காப்புறுதித் தொகை 25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக இருந்த 4,931 ரூபாய், தற்பொழுது 6,164 ரூபாவாக உயர்ந்துள்ளது.

மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களுக்கான காப்புறுதித் தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 75 சிசி மோட்டார் சைக்கிள்களுக்கான காப்புறுதித் தொகை 519 ரூபாவில் இருந்து 569 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் 75 சிசி முதல் 150 சிசி வரையிலான மோட்டார் சைக்கிள்களுக்கான காப்புறுதித் தொகை 15 சதவீதமும், 150 முதல் 350 சிசி வரையிலான மோட்டார் சைக்கிள்களுக்கான காப்புறுதித் தொகை 25 சதவீதமும் உயர்ந்துள்ளது.

மேலும், பொது போக்குவரத்து வாகனங்களுக்கான காப்புறுதித் தொகை 15 முதல் 30 சதவீதம் அதிகரிக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg