Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வணிகத் துறையில் ஆசியாவிலேயே சக்தி வாய்ந்த பெண் நீதா அம்பானி

In வணிகம்
Updated: 08:59 GMT, Apr 10, 2016 | Published: 08:57 GMT, Apr 10, 2016 |
0 Comments
1353
icon_com
This post was written by :
Nita Ambani

வணிகத் துறையில் ஆசியாவிலேயே சக்தி வாய்ந்த பெண்மணியாக, ரிலையன்ஸ் குழும நிறுவனங்களின் அதிபரான முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி அறிவிக்கப்பட்டுள்ளார்.

புகழ்பெற்ற வணிகப் பத்திரிகையான போர்ப்ஸ், ஆசியாவில் தொழிற் துறையில் சிறந்து விளங்கும் பெண்கள் தொடர்பில் அண்மையில் ஆய்வொன்றை நடத்தியது. இதன் முடிவில் 50 பெண்கள் கொண்ட பட்டியலை அப்பத்திரிகை வெளியிட்டுள்ளது.

இதில் முதல் இடத்தில் நீதா அம்பானியும், 2வது இடத்தில் இந்தியாவின் பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யாவும் உள்ளனர். அதேபோன்று இப்பட்டியலில் மொத்தம் 8 இந்திய பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், நீதா அம்பானி குறித்து போர்ப்ஸ் கருத்து தெரிவிக்கையில், ரிலையன்ஸ் தொழில் சாம்ராஜ்யத்தில் நீதாவின் எழுச்சி அசாத்தியமானது எனக் கூறி அவரைப் புகழ்ந்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg