Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முதுமையிலும் இளமை வேண்டுமா?

In
Updated: 10:26 GMT, Apr 11, 2016 | Published: 10:26 GMT, Apr 11, 2016 |
0 Comments
1252
icon_com
This post was written by :
Natural beauty

சிலர் வயது போன பிறகும் அழகாக இருப்பதற்காகா அதிகமான தொகை கொடுத்து அழகு சாதன பொருட்கள் வாங்கி உபயோகிக்கின்றனர். எனினும் அதற்கு அவர்களுக்கு பலன் கிடைக்காது. எனினும் மூலிகைகளின் பயன்பாட்டில் செய்யும் சில விடயங்கள் வயதானவர்களுக்கும் இளமையை தரும். முகம் நன்கு பொலிவுடனும், இளமையாகவும் காட்சியளிக்க இயற்கை மூலிகைகள் நல்ல பயன் தரும்.

கற்றாழை, வேப்பிலை, மஞ்சள், சந்தனம் போன்றவை சருமத்தை பொலிவுடன் வைத்திருக்க வெகுவாக உதவும். கற்றாழையில் இருக்கும் திரவம் சருமத்தில் இருக்கும் நச்சு கிருமிகளை கொல்கிறது, முக சுருக்கங்கள் மறையவும் அவை உதவுகிறது. அது மட்டுமன்றி, சருமத்தில் ஈரப்பதத்தையும் கட்டுப்படுத்துகிறது.

அதுபோன்றுதான் இயற்கை நிவாரணத்தில் வேப்பிலை மிகவும் நல்ல தீர்வு அளிக்கும். இது முகப்பரு மற்றும் ஏனைய சரும பிரச்சனைகளையும் சரி செய்ய அதிகம் உதவும். மேலும், சருமத்திற்கு புத்துணர்ச்சியும் அளிக்கும்.

மற்றுமொரு சிறந்த இயற்கை நிவாரணி மஞ்சள். இது, மாசு மரு, கருவளையம், கரும்புள்ளிகள் போன்றவற்றிலிருந்து தீர்வளிக்கிறது. அதேபோன்று குளிர்ச்சியுடைய சந்தனம் சரும அலற்சிகளுக்கு தீர்வளிக்கும், சருமத்தை மென்மையடைய செய்யும் மற்றும் சருமத்தின் வலிமையை அதிகரிக்கும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg