Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீன யுவான் இலங்கையில் இலகுவாக மாற்றக்கூடிய நாணயமாக்கப்படும்

In வணிகம்
Updated: 11:12 GMT, Apr 11, 2016 | Published: 11:09 GMT, Apr 11, 2016 |
0 Comments
1241
icon_com
This post was written by :
Chinese yuan

சீன யுவான் நாணயம் இலங்கையில் இலகுவாக மாற்றக்கூடிய நாணயமாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜுன மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனாவிற்கு விஜய மேற்கொண்டிருந்த போது, அவருடன் நாட்டின் உயர் மட்ட பொருளாதார குழுவொன்றும் சென்றிருந்தது. குறித்த குழுவில் மத்திய வங்கியின் ஆளுனரும் சென்றிருந்தார். இதன்போது, சீன வங்கி கொழும்பில் தமது நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான கலந்துரையாடலும் மேற்கொள்ளப்பட்டு, இவ்விடயம் உறுதிப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், சீன வங்கி கொழும்பில் தமது நடவடிக்கைகளை ஆரம்பித்ததன் பின்னரே சீன யுவான் நாணயம் இலங்கையில் இலகுவாக மாற்றக்கூடிய நாணயமாக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg