Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையில் தேயிலை கைத்தொழில் பாதுகாக்கப்பட வேண்டும் : சாகல

In வணிகம்
Updated: 11:29 GMT, Apr 11, 2016 | Published: 11:29 GMT, Apr 11, 2016 |
0 Comments
1250
This post was written by :

இலங்கையின் ஏற்றுமதித்துறைக்கு பிரதானமாகப் பங்களிப்பு செய்யும் தேயிலை கைத்தொழிலை பாதுகாப்பதற்கு மிக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

மாத்தறை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்பொழுதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ‘தற்போதைய நிலையில் பொதுமக்கள் பொருளாதார துன்பங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அதனை தாம் ஏற்றுக்கொள்கின்றோம்.

அதேபோன்று இலங்கையின் பிரதான ஏற்றுமதித் துறையான தேயிலை கைத்தொழில்துறை பாதுகாக்கப்பட வேண்டும். அதற்காக விரைவில் தீர்வொன்றை பெற்றுக்கொள்ள வேண்டும். இது நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு முக்கிய ஒரு தேவையாக உள்ளது’ என்று அவர் தெரிவித்தார்.

அண்மைக் காலத்தில், இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தேயிலையின் அளவில் சரிவு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்திருந்த நிலையிலேயே தற்பொழுது அமைச்சர் சாகல ரத்நாயக்க இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg