Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொருளாதார மத்திய நிலையமாக மாற்றப்படவுள்ள ஒலுவில் துறைமுகம்

In வணிகம்
Updated: 11:54 GMT, Apr 11, 2016 | Published: 11:45 GMT, Apr 11, 2016 |
0 Comments
1174
icon_com
This post was written by :
Oluvil port

கிழக்கு மாகாணத்தின் பொருளாதார அபிவிருத்திக்காக அமைக்கப்பட்டுள்ள ஒலுவில் துறைமுகம் பொருளாதார மத்திய நிலையமாக மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டள்ளது. இந்த தகவலை வர்த்தக மற்றம் கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

இத்துறைமுகம் கிழக்கு மாகாணத்தின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பங்களிப்பை செய்வதுடன், அங்குள்ள பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்கு இத்துறைமுகத்தின் மூலம் அதிக வேலைவாய்ப்புக்களும் கிடைக்கின்றன.

இந்த நிலையில் இதன் செயற்பாடுகள் மற்றும் வருமானத்தை மேலும் அதிகரிக்கும் முகமாக இத்துறைமுகத்தை சர்வதேச தரத்துக்கு அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதற்கான ஆரம்ப கட்ட செயற்பாடுகள் மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், இத்திட்டத்திற்கான செலவுகள் குறித்த விபரங்கள் மிக விரைவில் வெளியிடப்படவுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg