Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உளுந்துகஞ்சி

In
Updated: 04:35 GMT, Apr 12, 2016 | Published: 04:34 GMT, Apr 12, 2016 |
0 Comments
1338
icon_com
This post was written by : Shailu
Blackgram soup

தேவையான பொருட்கள்

உளுந்து – ஒரு டம்ளர்
பச்சரிசி – அரை டம்ளர்
வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
பூண்டு – 20 பல்
வெல்லம் அல்லது கருப்பட்டி – இனிப்புக்கு ஏற்றது போல்
தேங்காய் – அரை மூடி

செய்முறை

உளுந்தம்பருப்பு, பச்சரிசி, வெந்தயம், உரித்த பூண்டு அனைத்தையும் போட்டு ஆறு டம்ளர் (பருப்பு அளந்த டம்ளரில்) தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து 8 விசில் வரும் வரை விட வேண்டும்.

இது தயாராவதற்குள் வெல்லம் அல்லது கருப்பட்டியை சிறிதளவு தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி வைத்துக் கொள்ள வேண்டும். அத்தோடு, தேங்காய் அரைத்து பாலும் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும்.

எட்டு விசில் வந்தவுடன் இறக்கி சூடாக இருக்கும் போதே நன்கு மசித்துவிட்டு வெல்லப்பாகு, தேங்காய்ப் பால் இரண்டையும் ஊற்றி சூடாக பரிமாறவும். தற்போது சுவையான உளுந்தங்கஞ்சி தயார்…!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg