Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இன்று மாலை 6.36 இற்கு துர்முகி வருடம் உதயமாகிறது

In ஆன்மீகம்
Updated: 15:43 GMT, Apr 14, 2016 | Published: 09:32 GMT, Apr 13, 2016 |
0 Comments
1709
This post was written by : Anojkiyan

பிறகின்ற துர்முகி வருடத்தில், சகலரது வாழ்விழும் கஷ்டங்கள் விலகி, மகிழச்சியும், சமாதானமும் நிறைந்த வருடமாக அமைய வேண்டும் என பிரம்மஸ்ரீ கெங்காதர குருக்கள் (ஈவினை) ஆதவன் தொலைக்காட்சியூடாக ஆசிர்வாதத்தினை வழங்கியுள்ளார்.

பிறக்கின்ற தமிழ், சிங்கள புதுவருடத்தினை முன்னிட்டு ஆதவன் தொலைக்காட்சியுடாக நேயர்களுக்கு புதுவருடத்தின் பலாபலன்கள் குறித்து கூறுகையில் இவ்வாறு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேஷ ராசியில் கதிரவன் நுழைகின்ற தொடக்கமே தமிழ்ப் புத்தாண்டாகும். அறுபது வருட சுழற்சியில் 30ஆவது வருடமான துர்முகி வருடம் 13.04.2016 அன்று மாலை மலரவிருக்கின்றது.

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி இன்று (திங்கட்கிழமை) 13ஆம் திகதி இரவு 6.36 மணிக்கு புதுவருடம் பிறக்கிறது. அன்று பிற்பகல் 2.30 மணி தொடக்கம் இரவு 10.30 மணிவரை புண்ணிய காலமாகும். சிரசில் கடப்பம் இலையும் காலில் வேப்பம் இலையும் வைத்து மருத்து நீர் தேய்த்து நீராட வேண்டும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது.

திருக்கணித பஞ்சாங்கமோ 13ஆம் திகதி இரவு 7.48 மணிக்கு பிறப்பதாக கணித்துள்ளது. அன்று பிற்பகல் 3.48 மணி தொடக்கம் இரவு 11.48 மணிவரை புண்ணிய காலமாகும். சிரசுக்கு வேப்பம் இலையும் காலுக்கு கொன்றை இலையும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சூரிய பகவான் மீண்டும் மேஷ ராசியில் பிரவேசிக்கும் வரை உள்ள காலப்பகுதியே ஓர் தமிழ்- வருஷமாகும். இந்த புத்தாண்டு 13.04.2016 அன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg