Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மழைக்காலத்தில் அழகை பாதுகாக்க சில டிப்ஸ்

In
Published: 10:44 GMT, Apr 14, 2016 |
0 Comments
1181
icon_com
This post was written by : Anojkiyan
Beauty, spa. Attractive woman with beautiful face

முதலில் முகத்தை பேஸ் வோஷ் கொண்டு கழுவ வேண்டும். பின், கிளென்சர் பயன்படுத்தி முகத்தை சுத்தப்படுத்தி விட்டு, ஐஸ் கட்டிகள் வைத்து, முகத்தில், 10 முதல் 15 நிமிடங்கள் தேய்க்க வேண்டும். இது முகத்தில், அதிகமாக வியர்ப்பதை குறைக்க உதவுவதோடு, நாம் போடும் மேக்-அப் கலையாமல், பிரஷ்ஷாக வைத்திருக்க உதவும்.

மழைக்காலத்தில், மேக்-அப் செய்வதற்கு முன், பவுண்டேஷன் மற்றும் பேஸ் கிரீம்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மழை பெய்தால், இவை அனைத்தும் கரைந்துவிடும். தேவைப்பட்டால், தண்­ரில் கரையாத பவுண்டேஷன்களாக பயன்படுத்தலாம். சிறிதளவு பவுடர் மட்டும் பூசலாம். ஐஷேடோவாக, பிங்க் கலர் கிரீமை பயன்படுத்தலாம். பின், கண் அலங்காரத்திற்கு, தண்ணிரில் கரையாத மஸ்காரா உபயோகிக்க வேண்டும்.

மழைக்காலத்தில், உதட்டை அலங்கரிக்க, மேட்டி லிப்ஸ்டிக் தான் சிறந்தது. லைட் ஷேட், லிப் லைனர்கள் மற்றும் லிப்ஸ்டிக்கள் பயன்படுத்தலாம். இந்த காலத்தில் மாய்சரைசர் பயன்படுத்த மறந்து விடாதீர்கள். இவை, தோலில் ஏற்படும் நீர் இழப்பு மற்றும் பரு போன்றவற்றை தவிர்க்க உதவும்.

இயற்கையாகவே வறண்ட தன்மை கொண்ட முகம் உடையவர்களுக்கு, மழைக்காலத்தில், அது இன்னும் அதிகமாக இருக்கும். அவ்வாறானவர்கள், முட்டையின் மஞ்சள் கருவுடன், ஒரு டீஸ்பூன் பால் கிரீம் மற்றும் சில துளி பன்னீர் சேர்த்து கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் பூச வேண்டும். 15 நிமிடங்கள் நன்கு ஊறிய பின், தணணிரால் கழுவ வேண்டும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg