Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மனக்குழப்பம் தீர்க்கும் சந்திரன் பகவான் வழிபாடு

In ஆன்மீகம்
Updated: 08:25 GMT, Apr 17, 2016 | Published: 08:25 GMT, Apr 17, 2016 |
0 Comments
1447
This post was written by : Shailu

ஒரு சிலருக்கு எதைச் செய்தாலும் இரட்டித்த சிந்தனையும், மனக்குழப்பமுமாகவே இருக்கும். சும்மாயிருக்கும் பொழுதே அதைச்செய்வோமா, இதைச்செய்வோமா என்று சிந்தித்துக் கொண்டே இருப்பர். ஒரு சிலர் சொன்ன தகவல்களையே திரும்பத் திரும்பச் சொல்லுவர்.

இப்படிப்பட்ட குழப்பவாதிகள் ஜாதகத்தில் சந்திரன் பலம் இழந்திருப்பார். அல்லது சந்திரன் பகைக் கிரகத்தினுடன் கூடியிருப்பார். அவர்கள் பௌர்ணமி அன்று இரவு சந்திரனைப் பார்த்து வணங்கி, ‘ஓம் சந்திராய நமக’ என்று ஒன்பது முறை சொல்வது நல்லது.

அதுமட்டுமல்லாமல் சந்திரனுக்குரிய பச்சரிசியில் சாதம் வடித்து தானும், தன்னைச் சார்ந்தவர்களும், தாங்கள் வளர்க்கும் விலங்குகளையும் சாப்பிடச் சொல்வது நல்லது. இதைத் திங்கட்கிழமை செய்வது மிகவும் நல்லது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg