Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பூரண அருள் பெற விநாயகர் வழிபாடு

In ஆன்மீகம்
Updated: 10:04 GMT, Apr 18, 2016 | Published: 10:03 GMT, Apr 18, 2016 |
0 Comments
1378
This post was written by : Shailu

நவக்கிரகங்களில் ஒருவரான செவ்வாய்க்கு, விநாயகரை வழிபடும் முறைகளை பரத்வாஜ் முனிவர் சொல்லிக் கொடுத்தார். அதன்படி செவ்வாய், விநாயகரை நோக்கி கடும் தவம் இருந்தார்.

பக்திக்கு மகிழ்ந்த விநாயகர் அவர் முன் தோன்றி, செவ்வாய் நவக்கிரகங்களில் ஒன்றாக விளங்கும் வரம் கொடுத்தார். இந்த நாளை சங்கடஹரசதுர்த்தி என்று மக்கள் வழிபடுவார்கள். இந்த நாட்களில் விரதம் இருந்தால் விநாயகரின் பூரண அருளை பெறலாம். இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும்.

வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை அடைய முடியும்.

சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் பெரும்பகுதி குறையும். சங்கடஹர சதுர்த்தியன்று அதிகாலை நீராடி, பால் பழம் அருந்தி, உணவு உட்கொள்ளாமல் மாலை வரை கணநாதன் நினைவோடு உபவாசம் இருக்க வேண்டும்.

மாலை ஆலயத்திற்குச் சென்று, விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்துக் கொள்ள வேண்டும். அன்றைய தினம் ஆலயத்தை எட்டு முறை வலம் வருதல் வேண்டும்.

அனைத்து பூஜைகளும் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து உபவாசத்தை முடித்துக் கொள்ள வேண்டும். விநாயகப் பெருமானுக்கு வெள்ளை எருக்கு, அருகம்புல் மாலை சாற்ற வேண்டும்.

சங்கடஹர சதுர்த்தி தினத்தில் விநாயகருக்குரிய,
‘ஓம் தத் புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்’ எனும் கணேச காயத்ரீ மந்திரத்தையும், தமிழில் விநாயகர் அகவலையும் பாடி தொந்திக் கணபதியை தியானித்தால் கூடுதல் பலன் உண்டு.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg