Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிக்கன் கீமா தோசை

In
Updated: 03:53 GMT, Apr 19, 2016 | Published: 03:53 GMT, Apr 19, 2016 |
0 Comments
1205
This post was written by : Shailu

தேவையான பொருட்கள்

தோசை மாவு – 2 கப்
எண்ணெய் – சிறிதளவு
சிக்கன் – 200 கிராம்
எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி
முட்டை – 2
வெங்காயம் – 2
இஞ்சி, பூண்டு விழுது – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
ப.மிளகாய் – 3
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி
கரம்மசாலா தூள் – கால் தேக்கரண்டி
உப்பு – சுவைக்கு

செய்முறை

வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும்.சிக்கனை சுத்தமாக கழுவி அதனை மிக்சியில் போட்டு மைய அரைத்து கொள்ளவும்.நறுக்கிய வெங்காயத்துடன், ப.மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில், 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அரைத்த விழுதினை போட்டு 5 நிமிடம் வதக்கவும்.அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம்மசாலா தூளை சேர்த்து நன்றாக கிளறவும்.அடுத்து அதில் அரைத்த சிக்கனை போட்டு நன்றாக கிளறி வேகவைக்கவும். நன்றாக வெந்து முட்டை பொடிமாஸ் போல் வரும். கடைசியாக எலுமிச்சை சாறு கலந்து ஆற வைக்கவும்.

இப்போது சிக்கன் கீமா ரெடி.ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் கீமாவை போட்டு நன்றாக அடித்து கலக்கவும். தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி தோசை சுடவும். பின்னர் அதன் மேல் கலந்து வைத்துள்ள கீமா கலவையை சிறிது ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்றவும்.வெந்ததும் திருப்பி போட்டு மறுபக்கம் வேக வைத்து எடுக்கவும். ( தோசையை திருப்பி போடாமல் மூடி போட்டு வேகவைத்தும் செய்யலாம்) இப்போது சுவையான சிக்கன் கீமா தோசை ரெடி.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg