Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மன அழுத்தத்தைப் போக்க இயற்கை வழிகள்

In
Updated: 07:32 GMT, Apr 19, 2016 | Published: 07:31 GMT, Apr 19, 2016 |
0 Comments
1323
icon_com
This post was written by :
stress3

மன அழுத்தம் ஒருவருக்கு பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். குறிப்பாக செரிமான கோளாறு, தலைவலி, நரம்புதளர்ச்சி, வாந்தி, தூக்கமின்மை, பயம், வேலைகளில் ஆர்வம் இன்மை போன்ற பல நிலைகளை இந்த மன அழுத்தம் ஏற்படுத்தும். அவ்வாறாhனவர்களை மன அழுத்தத்திலிருந்து மீட்டு எடுப்பது மிகவும் முக்கியமாகும்.

நரம்புகள் மற்றும் மூளையுடன் தொடர்புடைய இந்த பிரச்சினையை இயற்கையான முறையில் சரிசெய்வதே சிறந்தது. அவ்வாறான இயற்கை முறைகள் சிலவற்ளைப் பார்ப்போம்.

தியானம், யோகா, அக்குபஞ்சர், இசை, மசாஜ் மற்றும் ஊட்டசத்துள்ள உணவுகள் போன்றவை மூலம் மன அழுத்தத்தை இயற்கையான முறையில் குணப்படுத்தலாம். தியானம் என்றால் 15 நிமிடம் முதல் 20 நிமிடங்கள் நிதானமாக மனதை ஒருமுகப்படுத்தி அமைதியாக ஒரே ஒளி, ஒலி மந்திர குறிப்பிட்ட ஒரு பிம்பத்தின் மீது மனதை குவிய செய்தலாகும்.

அதேபோன்று, யோகா, தியானத்துடன் உடலை சில நிலைகளில் அமர செய்து மூச்சுப்பயிற்சியுடன் உடல் எடையை மறந்து ரிலாக்சாக்குதல் மூலமும் மன அழுத்தத்திற்கு நல்ல மாற்றம் ஏற்படும்.

மசாஜ் மூலம் உடல் பாகங்களை தடவும் முறையாலும் உடலுக்கு நல்ல சுகமும் அமைதியும் கிடைக்கும். மானசீகமாக தடவும் போது மனமும் உடலும் தொடர்புக்குள்ளாகிறது. உடல் சுகம் கிடைக்கிறது. இதனால் ஆவேசம், தீவிர உணர்ச்சி, கோபம், கவலை என்பன நீங்கும்.

அதேபோன்று, மன அழுத்தத்திற்கு மருந்தில்லாமல் அனைத்து வயதினருக்கும் இசை மூலம் நிவாரணம் காணலாம். இசை ஒரு மனிதனின் மனதில் உள்ள கோபம், அழுத்தம், கவலை, மனப்பாரம் என்பவற்றைப் போக்கும் ஒரு சிறந்த மருந்தாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg