Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முகத்தில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும் தக்காளி பேஷியல்

In
Published: 07:44 GMT, Apr 19, 2016 |
0 Comments
1259
icon_com
This post was written by :
Tomato facial

பெரும்பாலும் அதிகமான பெண்கள் விரும்பும் தக்காளி பேஷியல், ஒருவரது முகத்தை கண்ணாடி போல் பளப்பளப்பாக மாற்ற உதவுகிறது. இது முகத்தில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படுவதை மிக விரைவில் காண்பிக்கும்.

இதனை செய்வதற்காக முதலில், உருளைக்கிழங்கு துருவல் சாறு மற்றும் தக்காளி விழுது ஆகிய இரண்டையும் கலந்து கொள்ளவும். அந்தக் கலவையை கழுத்து மற்றும் முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்துக் கழுவ வேண்டும். தொடர்ச்சியாக இதை செய்து வந்தால், சில நாட்களிலேயே சரும வித்தியாசத்தை உணர முடியும்.

ஒரு சிலருக்கு முகத்திலுள்ள கலங்கள் இறந்து போய் முகம் சற்று பொலிவிழந்து காணப்படும். அவர்களுக்கான சிறந்த சிகிச்சைதான் இந்த தக்காளி பேஷியல் ஸ்க்ரப். ஒரு தக்காளி சாறுடன் கால் கரண்டி ரவையைக் கலந்து கொள்ளவும். பின்னர் இதை நன்றாக முகத்தில் தேய்த்துக்கொண்டு 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். இதை தொடர்ச்சியாக செய்து வந்தால் விரைவில் முகம் பிரகாசித்து காணப்படும்.

கோடை வெயில் ஆரம்பமாகும் காலங்களில் தக்காளியை கொண்டு முகத்தை பேஷியல் செய்து வந்தால் வெயில் காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg