Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இங்கிலாந்து ஒன்றியத்திலிருந்து வெளியேறினால் சர்வதேச பொருளாதாரம் பாதிப்படையும்

In வணிகம்
Updated: 08:18 GMT, Apr 19, 2016 | Published: 08:15 GMT, Apr 19, 2016 |
0 Comments
1218
icon_com
This post was written by :
Uk & EU

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேறுமேயானால், அது உலக பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய சவாலாக அமையும் என்று வளர்ச்சியடைந்த முக்கிய நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன.

அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் அண்மையில் ஜி 20 நாடுகளின் நிதியமைச்சர்கள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்பொழுதே வளர்ந்த நாடுகளின் பல தலைவர்கள் இங்கிலாந்தின் வெளியேற்றம் குறித்த இந்த கருத்தை தெரிவித்திருந்தனர்.

இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில், ‘ஏற்கனவே உலகபொருளாதாரம் பல்வேறு பாதிப்புக்களால் மந்தமாக உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுமாயின் அது மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்தும்’ என தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இங்கிலாந்து தொடர்ந்து இருப்பதா? அல்லது விலகுவதா? என்பது குறித்து அந்நாடு பரிசீலித்து வருகிறது. இது தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பு எதிர்வரும் ஜூன் மாதம் 23ஆம் திகதி அங்கு இடம்பெறுகின்றது.

இந்நிலையில், அந்நாட்டு பிரதமர் டேவிட் கமரன், நாட்டின் எதிர்கால பொருளாதாரத்தைக் கருத்தில் கொண்டு இங்கிலாந்து தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரசாரம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg