Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஷாபகார் துறைமுக திட்டம் குறித்து ஈரான் – இந்தியா ஒப்பந்தம்

In வணிகம்
Updated: 11:04 GMT, Apr 19, 2016 | Published: 08:43 GMT, Apr 19, 2016 |
0 Comments
1172
icon_com
This post was written by :

இந்தியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் இணைந்து ஷாபகார் துறைமுக திட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டள்ளது. இந்தத் தகவலை இந்தியா வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.

நேற்றுமுன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) இந்தியா வெளிவிவகார அமைச்சர் சுஷ்மாசுவராஜ் மற்றும் ஈரான் வெளிவிவகார அமைச்சர் முகமது ஜாவித் ஷெரீப் ஆகியோரிடையிலான சந்திப்பொன்று ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இடம்பெற்றது. குறித்த சந்திப்பின்போதே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இருவருக்குமிடையிலான குறித்த சந்திப்பின்போது, ஈரான் மற்றும் இந்திய இடையிலான இன்னும் பல வர்த்தக உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

அதில் குறிப்பாக, இருநாடுகளுக்கு இடையே ஏற்றுக்கொள்ளப்பட்ட எண்ணெய் மற்றும் எரிவாயு பிரிவுகளில் வர்த்தக உடன்படிக்கை, இரட்டை வரி தவிர்ப்பு உடன்படிக்கை மற்றும் முதலீடு உள்ளிட்ட நிலுவையில் உள்ள ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு முன்னுரிமை அளிப்பது போன்ற உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இருநாடுகளும் இணைந்து வணிக ரீதியிலான ஷாபகார் துறைமுக திட்டத்தை செயல்படுத்துவதற்காக, இந்தியா 150 மில்லியன் டொலர் கடன் உதவி அளிக்க உறுதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg