Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சர்வதேச பொருளாதார நிலைமை கவலையளிக்கின்றது : அருண் ஜெட்லி

In வணிகம்
Published: 09:48 GMT, Apr 19, 2016 |
0 Comments
1163
icon_com
This post was written by :
Arun-Jaitley

தற்பொழுது நிலவும் சர்வதேச பொருளாதார நிலைமை மிகவும் மோசமாக உள்ளமையானது கவலையளிக்கின்றது என்று இந்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். தற்பொழுது அமெரிக்க சென்றுள்ள இந்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, அங்கு இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்பொழுதே இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், ‘தற்போதைய சர்வதேச பொருளாதார நிலைமையானது, அச்சம் கொள்ளும் வகையிலும், கவலை அளிக்கும் விதத்திலும் உள்ளது. இதில் முக்கியமாக எண்ணெய் விலை குறைந்திருப்பது சர்வதேச பொருளாதாரத்தில் பாரிய தாக்கம் செலுத்துகின்றது.

அதேபோன்று, வளர்ந்த நாடுகள் தங்களுடைய பொருளாதாரக் கொள்கைகளை வகுக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். சர்வதேச பொருளாதார நிலை மந்தமாக இருப்பதால் அவர்களுடைய முடிவு இதர சந்தைகளையும் பாதிக்கும்.

வளர்ந்த நாடுகள் குறைவான அல்லது எதிர்மறையான வட்டி விகிதங்களை நிர்ணயம் செய்யும் போது, ஒட்டுமொத்த சந்தையிலும் ஏற்ற இறக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகிறது. எனவே நிதி நெருக்கடி வராமல் தடுக்க தேவையான வலிமையான நடவடிக்கைகளை சர்வதேச செலாவணி மையம் எடுக்க வேண்டும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg