Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வேகமாக கலோரி எரிக்கும் ரோவிங் பயிற்சி

In
Published: 04:49 GMT, Apr 20, 2016 |
0 Comments
1230
icon_com
This post was written by :
Rowing Exercise

உடல் எடை குறைந்து, நல்ல உறுதியாக இருக்க பல்வேறு பயிற்சிகள் உள்ளன. ஆனால், எந்தப் பயிற்சிகளைச் செய்தால், உடல் எடை குறையும் என்பதுதான் பலருக்கும் தெரிவதில்லை.

நடைப்பயிற்சி முதல் வலுவூட்டும் பயிற்சிகள் வரை ஒவ்வொரு பயிற்சியிலும் நாம் செய்யும் வேகத்தைப் பொறுத்து கலோரிகள் எரிக்கப்படும். குறைந்த நேரத்தில் அதிக கலோரிகளை எரிக்கும் பயிற்சிகளைச் செய்தால், எடையை விரைவாகக் குறைக்க முடியும். இதற்குள்ள ஒரு சிறந்த பயிற்சி ரோவிங் பயிற்சி.

இந்தப் பயிற்சி செய்வதன் மூலம், அரை மணி நேரத்தில் 377 கலோரிகளை எரிக்கலாம். இந்தப் பயிற்சியில் வேகமாக முன்னும் பின்னும் நகர்ந்துகொண்டே இருப்போம் என்பதால், இடுப்புப் பகுதியில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரையும்.

‘கோர்’ தசைகள் வலுவடையும். இதன் மூலம், தசைகளில் எளிதில் காயங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். முழு உடலுக்கான பயிற்சி இது. எனவே, உடல் உறுதியாகும். உடல் எடை குறைப்பவர்களுக்கு ஏற்ற பயிற்சி. புடத்தில் உள்ளது போன்று கயிற்றை நன்றாக வேகமாக இழுக்கும்போது, முன் கையில் இருக்கும் தசைகள் வலுப்பெறுகின்றன. அதேபோன்று கால், உடம்பு, மார்பு என உடலின் அனைத்து பாகங்களும் இந்த பயிற்சியின் போது வேலை செய்கின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg