Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டட்சன் ரெடி கோ வகை காரை அறிமுகப்படுத்தியது நிசான்

In வணிகம்
Updated: 11:48 GMT, Apr 20, 2016 | Published: 08:55 GMT, Apr 20, 2016 |
0 Comments
1310
This post was written by :

ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான நிசான் தனது பிரபல உற்பத்தி வகையான டட்சன் தயாரிப்பின் மூன்றாவது வடிவை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அறிமுக நிகழ்வு அண்மையில் இந்திய தலைநகர் டெல்லியில் இடம்பெற்றுள்ளது.

டட்சன் ரெடி கோ என்ற பெயரில் அறிமுகமாகியுள்ள இந்த கார் தமது தயாரிப்புக்களின் புதிய வடிவை வெளிக்காட்டும் விதத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று நிசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், இதில் ஏனைய நிசான் தயாரிப்புக்களில் உள்ள வசதிகளுடன் சேர்த்து சில புதிய வசதிகளும் உள்ளன. இந்திய சந்தையில், மருதி சுஸுகி, அல்டோ மற்றும் ஹூண்டாய், இயான் ஆகிய வகை கார்களுக்குப் போட்டியாக இது இருக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதன் விலை இன்னும் நிர்ணயிக்கப்படாத நிலையில், இதன் முன்பதிவு மே மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg