Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொழும்பு பங்குச் சந்தையில் ஒரு வருடத்தில் 25,700 கோடி ரூபா இழப்பு

In வணிகம்
Updated: 11:48 GMT, Apr 20, 2016 | Published: 10:46 GMT, Apr 20, 2016 |
0 Comments
1201
icon_com
This post was written by :
colombo_stock_exchange

கொழும்பு பங்குச் சந்தை கடந்த ஒரு வருடகாலப் பகுதிக்குள் 25,700 கோடி ரூபா பெறுமதியளவில் இழப்பை எதிர்கொண்டுள்ளது. இது பாரியளவு வீழ்ச்சியைக் காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையொன்றின்படி, இதற்கேற்ப கடந்த வருடத்தில் 2,931 பில்லியன்களாக இருந்த பங்குச் சந்தையின் மொத்தப் பெறுமதி ஒரு வருடம் கடந்துள்ள நிலையில், தற்போது 2,674 பில்லியன் ரூபாவாக காணப்படுகின்றது.

அத்துடன் கடந்த ஒரு வருடகாலப்பகுதிக்குள் கொழும்பு பங்குச் சந்தையின் சராசரி பங்குவிலை 6914 ரூபாவிலிருந்து 6276 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வருகையில் வீழ்ச்சி, மற்றும் அந்நிய முதலீடுகள் மீளப் பெறப்பட்டமை போன்ற காரணிகளே பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு பிரதான காரணமாக உள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg