Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘Apple Pay’ சேவையை சிங்கப்பூரிலும் விஸ்தரித்துள்ள அப்பிள் நிறுவனம்

In வணிகம்
Updated: 11:45 GMT, Apr 20, 2016 | Published: 11:44 GMT, Apr 20, 2016 |
0 Comments
1188
icon_com
This post was written by :
ApplePay

அப்பிள் நிறுவனம் கொடுக்கல் வாங்கல்களை இலகுபடுத்துவதற்கு அறிமுகம் செய்த ‘Apple Pay’ சேவை தற்பொழுது, சிங்கப்பூரிலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. மேலும் இச்சேவையினை American Express நிறுவத்துடன் இணைந்து வழங்க அப்பிள் நிறுவனம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

‘Apple Pay’ சேவையானது முதன் முறையாக அமெரிக்காவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. மொபைல் சாதனங்களின் ஊடாக பணத்தைச் செலுத்தும் இச்சேவை அங்கு வெற்றியளித்துள்ளது. இதனால் குறித்த சேவையை ஏனைய நாடுகளிற்கும் விரிவுபடுத்த அப்பிள் நிறுவனம் எண்ணியது. இதன் அடுத்த கட்டமாகவே தற்பொழுது Apple Pay சேவை சிங்கப்பூரில் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

இதனை iPhone 6, 6 Plus, iPhone 6S, 6S Plus, iPhoneSE மற்றும் Apple Watch உட்பட iPad Air 2, iPad Pro, iPad Mini ஆகிய சாதனங்களின் ஊடாக உபயோகிக்க முடியும் என்று அப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இவ்வருட இறுதிக்குள் ஐக்கிய ராச்சியம், சீனா, கனடா, அவுஸ்திரேலியா, ஸ்பெயின் மற்றும் ஹொங்கொங் ஆகிய நாடுகளிலும் Apple Pay சேவை அறிமுகம் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg