Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வாழைப்பழ அப்பம்

In
Updated: 07:09 GMT, Apr 21, 2016 | Published: 07:05 GMT, Apr 21, 2016 |
0 Comments
1221
icon_com
This post was written by :
Vaalaippala appam

தேவையான பொருட்கள்
பச்சரிசி 400 கிராம்
மைதா மாவு 250 கிராம்
சீனி 500 கிராம்
வாழைப்பழம் 15
ஏலக்காய் 10
முற்றின் தேங்காய் 1
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 500 கிராம்

செய்யும் முறை
பச்சரிசியை சுத்தம் செய்து, களைந்து, உரலில் இட்டு வெண்ணைப் போல அரைத்து, ஓர் அகலமான பாத்திரத்தில் போட்டு, அத்துடன் மைதா மாவு, சீனியைக் கலந்து பிசைந்து கொள்ள வேண்டும். தேங்காயைத் துருவிப் போட வேண்டும். வாழைப்பழத்தை மேல்தோலை உரித்து விட்டு, அரைத்த மாவுடன் கலந்து பிசைய வேண்டும்.
கடைசியில் தேவையான உப்பைப் பொடி செய்துப் போட்டு நன்றாகக் கலந்து கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் எண்ணெய்யை ஊற்றி, அடுப்பில் வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் மாவை ஒவ்வொரு கரண்டியாக எடுத்து வடை போல வட்டமாக ஊற்ற வேண்டும். அதன் இருபுறமும் சிவக்க வெந்ததும் எடுத்தால் வாழைப்பழ அப்பம் தயார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg