Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

போலிக் அமிலத்தின் முக்கியத்துவம்

In
Published: 07:38 GMT, Apr 21, 2016 |
0 Comments
1217
icon_com
This post was written by :
Folic Acid

கர்ப்பம் உறுதியானதுமே பெண்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரைப்பது போலிக் அமில மாத்திரைகள். அதன்அவசியம் உணராமல் அலட்சியப்படுத்துகிற பெண்கள் பலர் போலிக் அமில குறைபாடுகளினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

போலிக் அமிலம் என்பது ஒருவகையான பி விட்டமின். இது புதிய செல்கள் உருவாக உடலுக்கு மிக அத்தியாவசியமானது. எல்லா மக்களுக்குமே போலிக் அமிலம் அவசியம் என்றாலும் கருத்தரிக்க விரும்பும் பெண்களுக்கு அது மிக மிக அவசியம். கருத்தரிப்பதற்கு முன்பும் கருத்தரித்த பிறகும் ஒரு பெண்ணின் உடலில் போதிய அளவு போலிக் அமிலம் இருக்குமானால், அது குழந்தையின் பிறவிக் கோளாறுகள் பலவற்றைத் தவிர்க்கும்.

குழந்தை பிறப்பதற்கு முன்பே அதன் முதுகெலும்பை பாதிக்கும் ளுpiயெ டிகைனைய என்கிற இந்தப் பிரச்சினையால் முதுகெலும்பு மட்டுமின்றி, கால் அசைவுகளைக் கட்டுப்படுத்தும் நரம்புகளின் இயக்கமும் பாதிக்கப்படும். இப்படிப் பிறக்கும் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் பிரச்சினைகள் தொடரும். நிறைய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட வேண்டியிருக்கும்.

போலிக் அமிலக் குறைபாட்டால் உண்டாகிற யுநெnஉநிhயடல பிரச்சினை குழந்தையின் மூளை வளர்ச்சியைப் பெரிதும் பாதிக்கும். இதனால் குழந்தை பிறப்பதற்கு முன்போ அல்லது பிறந்த உடனேயோ இறந்து போகலாம். போதுமான போலிக் அமிலம் இருக்கும் பட்சத்தில் ரத்தசோகை, இதயக் கோளாறுகள் மற்றும் புற்றுநோய் அபாயங்களும் தவிர்க்கப்படுகின்றன.

கர்ப்பமாகும் திட்டத்தில் இருக்கிற பெண்களுக்கு தினமும் 400 முதல் 800 மைக்ரோகிராம் அளவுக்கு போலிக் அமிலம் தேவை. கர்ப்பமாகிற திட்டம் இல்லாதவர்களுக்கும் இதே அளவு எடுத்துக் கொள்கிற பட்சத்தில், பின்னாளில் அவர்களுக்குக் குழந்தைகள் பிறக்கும் போது பிறவிக் கோளாறுகள் ஏற்படுவது தவிர்க்கப்படும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg