Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உடற்பயிற்சிக்கு ஒத்த ஸ்கிப்பிங்

In
Published: 07:54 GMT, Apr 21, 2016 |
0 Comments
1255
icon_com
This post was written by :
Skipping

உடலில் தேவையற்ற கொழுப்புகள் அதிகம் உள்ளவர்கள் மற்றும் தொப்பை உள்ள பலருக்கு வெளியில் சென்று உடற்பயிற்சி நடைபயிற்சி என்பன செய்வதற்கு நேரம் இருக்காது. ஆனால், அவ்வாறானவர்கள் வீட்டில் இருந்தவாரே, தினமும் ஸ்கிப்பிங் பயிற்சி செய்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து தொப்பை பிரச்சினையும் படிப்படியாக குறையும்.

பத்து நிமிட ஸ்கிப்பிங் பயிற்சி, எட்டு நிமிடங்களில் ஒரு மைல் தூரம் ஓடியதற்குச் சமம். ஒரு மணி நேரத்தில் 1300 கலோரிகள் வரை எரிக்கலாம். உடல் வலிமை அதிகரிக்கும். உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு கரையும். கூன் விழாமல் தடுக்கலாம். உடலுக்கும் மனதுக்கும் ஒரு சேரப் பயிற்சி கிடைப்பதால் மன அழுத்தம், எதிலும் நாட்டமின்மை போன்ற பிரச்சினைகள் நீங்கி மனம் ஒருமுகப்படும்

ஸ்கிப்பிங் பயிற்சி செய்ய ஆரம்பிக்கும் போது முதலில் உடலில் உள்ள தேவையற்ற எடைகுறைகிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும், உடலுக்குப் புத்துணர்வையும் தரக் கூடியது இந்த ஸ்கிப்பிங் பயிற்சி.

உடலின் உள் உறுப்புகளும், நரம்புகளும் தக்க பயிற்சி கிடைப்பதால் அவற்றின் செயல்பாடுகள் சீராகின்றன. மனக்கவலை, மன அழுத்தம், எதிலும் நாட்டமின்மை போன்ற கோளறுகள் நீங்குகின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg