Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெளிநாட்டுக் கடனை எதிர்பார்த்துள்ள சவுதி அரேபியா

In வணிகம்
Published: 08:59 GMT, Apr 21, 2016 |
0 Comments
1165
icon_com
This post was written by :
Saudi Arabia

கடந்த 2 ஆண்டுகளாக எண்ணெய் விலை கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகின்ற நிலையில், சவுதி அரேபியாவின் வருமானம் மிகவும் குறைந்துள்ளது. எனவே சவுதிஅரேபியா வெளிநாட்டில் இருந்து கடன் வாங்கும் ஒரு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது

ஏராளமான எண்ணெய் கிணறுகள் இருப்பதால் சவுதிக்கு வருமானம் பெருமளவில் வந்துகொண்டிருந்தது. எனினும் அண்மைக்காலமாக அந்நாடு உட்பட அனைத்து எண்ணெய் வள நாடுகளுக்கும், எண்ணெய் விலை வீழ்ச்சி பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக தற்பொழுது அந்நாட்டின் பொருளாதார நிலை பாரியளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. அவர்களிடம் இருக்கும் பணத்தை கொண்டு நாட்டின் நிர்வாகத்தை நடத்த முடியாத ஒரு நிலைக்கு சவுதி தள்ளப்பட்டுள்ளது. எனவே வெளிநாட்டில் இருந்து கடன் வாங்கும் நிலைக்கு சவுதி அரேபியா உள்ளாகியுள்ளது.

சவுதி அரேபியா இதற்கு முன்னர் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடுகளில் இருந்து கடன் வாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg