Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மலையகத்தில் சிறப்பாக நடைபெற்ற சித்ரா பௌர்ணமி

In ஆன்மீகம்
Updated: 09:12 GMT, Apr 21, 2016 | Published: 09:10 GMT, Apr 21, 2016 |
0 Comments
1227
icon_com
This post was written by : Varshini
chithra powrnamy (7)

இந்து மக்களின் பிரதான விரத அனுஷ்டானங்களில் ஒன்றான சித்ரா பௌர்ணமி விரத நிகழ்வு, மலையத்தில் இன்று (வியாழக்கிழமை) சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மலையகத்தில் புஸ்ஸல்லாவ பிளக் பொரஸ்ட் ஸ்ரீ விவேகானந்தா அறநெறி பாடசாலையில், இவ்விரத அனுஷ்டானம் இன்று காலை நடைபெற்றது. இதில் அறநெறி பாடசாலையின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர். இதன்போது, பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்களால் 108 விநாயகர் துதியும், அம்மன் துதியும் ஓதப்பட்டு பஜனை இசைக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது.

சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரத்தில் வரும் பௌர்ணமியே சித்ரா பௌர்ணமி ஆகும். இன்றைய தினத்தில், பக்தர்கள் சித்திர குப்த விரதம் நோற்பார்கள். இதன்போது சித்திர குப்தருடைய கதையைக் கேட்டும், ஏழை மக்களுக்கு கஞ்சி காய்ச்சி கொடுத்தும் வழிபடுவார்கள். இந்நாளில் தோன்றும் பால்போன்ற நிலவைப் போல், மக்களது உள்ளமும் மகிழ்ச்சியில் பொங்கி திளைக்கும் என்பது ஐதீகமாகும்.

chithra powrnamy (9) chithra powrnamy (10) chithra powrnamy (6) chithra powrnamy (2) chithra powrnamy (4) chithra powrnamy (3) chithra powrnamy (8) chithra powrnamy (1) chithra powrnamy (5)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg