Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பகிரங்கமாக மன்னிப்பு கோரிய மிட்சுபிஷி

In வணிகம்
Updated: 11:47 GMT, Apr 21, 2016 | Published: 10:27 GMT, Apr 21, 2016 |
0 Comments
1257
icon_com
This post was written by :

பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான மிட்சுபிஷி, எரிபொருள் சிக்கனம் குறித்த அறிவிப்புக்களில் தம்மால் தவறு நடந்திருக்கின்றமையை ஒப்புக்கொண்டு, அதற்கான மன்னிப்பும் கோரியுள்ளது.

மிட்சுபிஷி நிறுவனம் தயாரித்த சுமார் 6 லட்சம் கார்களில் எரிபொருள் சிக்கனம் குறித்த தகவல்கள் தவறானவை என முறைப்பாடுகள் எழுந்தன. எனவே, இது குறித்து கருத்து வெளியிடுவதற்காக அந்நிறுவனம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் (புதன்கிழமை) செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தியது.

இதன்போது கருத்து தெரிவித்த அந்நிறுவன தலைவர் வுநவளரசழ யுமையறய, ‘தவறு நடந்திருப்பது உண்மைதான். என்றும், அதற்காக அந்நிறுவனத்தின் பங்குதாரர்களிடமும், வாடிக்கையாளர்களிடமும் தலைவணங்கி மன்னிப்பு கேட்பதாக’ அவர் தெரிவித்தார்.

மிட்சுபிஷி நிறுவனம் தனது சொந்த விற்பனைக்காகத் தயாரித்த ஒரு லட்சத்து 57 ஆயிரம் கார்களிலும், நிசான் நிறுவனத்துக்காகத் தயாரித்த 4 லட்சத்து 68 ஆயிரம் கார்களிலும் இந்த தவறு நடந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg