Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முத்தேர் திருவிழா

In ஆன்மீகம்
Published: 11:23 GMT, Apr 21, 2016 |
0 Comments
1154
icon_com
This post was written by :
N.Eliya ther 01

நுவரெலியா ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த சித்ரா பௌர்ணமி முத்தேர் திருவிழா இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெற்றது. குறித்த நிகழ்வுகள் காலை 10.30 மணியளவில் ஆரம்பமானது.

முத்தேர் பவனியின் போது இந்துக்கள் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கரகாட்டம், மயிலாட்டம் உட்பட இன்னும் பல கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

மேலும் இந்த முத்தேர் திருவிழாவில் ஆலயத்தின் நிர்வாக சபை தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன், ஆலய ஆயுட் காப்பாளரும் முன்னால் பிரதி அமைச்சருமான முத்து சிவலிங்கம் மற்றும் ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள் உட்பட பக்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இந்துக்களின் மத வழிபாட்டில் முக்கிய அம்சமாகவும் தெய்வ கடாட்சத்தைப் பெறும் நிகழ்வாகவும் கருதப்படும் வடம் பிடிக்கும் நிகழ்வில், பெரும்திரளான பக்தர்கள் கலந்து கொண்டதோடு, அம்பாளின் அருளாசியைப் பெற்றேகினர்.

N.Eliya ther 02
N.Eliya ther 03
N.Eliya ther 04
N.Eliya ther 05
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg