Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

10வது வருடாந்த ஸ்லிம் நீல்சன் மக்கள் விருது : 9வது தடவையாக விருதினை வென்ற கொகா-கோலா

In வணிகம்
Updated: 11:31 GMT, Apr 22, 2016 | Published: 11:31 GMT, Apr 22, 2016 |
0 Comments
1271
This post was written by : Anojkiyan

அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற 10வது வருடாந்த ஸ்லிம் நீல்சன் மக்கள் விருதுகள் நிகழ்வில் தொடர்ச்சியாக ஒன்பதாவது தடவையாக ஸ்லிம் நீல்சன் ஆண்டுக்கான இளைஞர்களின் குளிர்பான வர்த்தகநாமம் என்ற விருதினை கொகா-கோலா வர்த்தக நாமம் பெற்றுக்கொண்டது.

இந்த வர்த்தக நாமமானது, இலங்கையர்களுக்கு புத்துணர்வூட்டி வந்துள்ளதுடன், தேசத்தின் இளைஞர்களுடன் விளையாட்டு, இசை, கொண்டாட்ட நிகழ்வுகள், சமூக செயற்திட்டங்கள் என ஏராளமான வழிமுறைகள் ஊடாக தனித்துவமிக்க இணைப்பினை பேணி வருகின்றது.

சிறந்த அங்கீகாரத்தினை பெற்றுள்ள இந்த விருதினை கொகா-கோலா ஸ்ரீலங்கா பிரைவேற் லிமிடட் முகாமைத்துவ பணிப்பாளர் திருமதி. சோனு க்ரோவர், கொகா-கோலா ஸ்ரீலங்கா பிரைவேற் லிமிடட் தேசிய சந்தைப்படுத்தல் முகாமையாளர் ஷாந்த பெர்ணாண்டோ மற்றும் குழுவினர் பெற்றுக்கொண்டனர்

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg