Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அடிவயிற்றுக் கொழுப்பை வேகமாக குறைக்க சில பச்சை நிற உணவுகள்!

In
Updated: 07:11 GMT, Apr 23, 2016 | Published: 07:11 GMT, Apr 23, 2016 |
0 Comments
1394
icon_com
This post was written by : Anojkiyan
go-for-greens

குடைமிளகாய் : குடைமிளகாயில் வைட்டமின் சி ஏராளமான அளவில் உள்ளது. மேலும் இது தன்னுள் மிகுந்த ஊட்டச்சத்துக்களை அடக்கியுள்ளது. இதில் உள்ள உட்பொருட்களால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, உடலில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்புக்கள் வேகமாக கரையும். எனவே இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து வாருங்கள்.

பச்சை அப்பிள் : இதுவரை நீங்கள் சிவப்பு அப்பிள் தான் நல்ல என்ற நினைத்துக் கொண்டிருப்பவரா? அப்படியெனில் உங்கள் எண்ணத்தை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. சிவப்பு அப்பிளை விட பச்சை அப்பிளில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்துக்கள் அதிகமாகவும் உள்ளது. அதாவது இதனை உட்கொண்டால் உடலின் ஆற்றல் அதிகரித்து, கொழுப்புக்களும் வேகமாக கரையும்.

பச்சை மிளகாய் : உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். எனவே தொப்பையைக் கரைக்க நினைப்போர் உணவில் பச்சை மிளகாயை சேர்த்து சமைத்து சாப்பிட்டால், கொழுப்புக்களை கரைக்கும் பணி வேகப்படுத்தப்பட்டு, தொப்பை வேகமாக குறையும்.

பீன்ஸ் : பீன்ஸில் நார்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளதால், தொப்பையைக் குறைக்க நினைப்போர், பீன்ஸை வாரத்திற்கு 2 முறை சமைத்து சாப்பிடுவது நல்லது. அதிலும் பீன்ஸை வேக வைத்து சாப்பிடுவது இன்னும் சிறப்பான பலனைத் தரும்.

ப்ராக்கோலி காலிஃப்ளவர் : போன்று பச்சை நிறத்தில் உள்ள ப்ராக்கோலியில் வைட்டமின் கே அதிகம் உள்ளது. இது உடல் எடையை வேகமாக குறைக்க உதவும். ஏனெனில் இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். மேலும் இது புற்றுநோய் அபாயத்தையும் குறைக்கும்.

பசலைக்கீரை : பசலைக்கீரையில் வைட்டமின்களும், புரோட்டீன்களும் வளமாக உள்ளது. மேலும் இதில் கலோரிகள் குறைவு, ஆற்றல் மற்றும் நார்ச்சத்து அதிகம். ஆகவே எடையைக் குறைக்க நினைப்போர் இந்த கீரையை உணவில் அடிக்கடி சேர்க்க நல்ல மாற்றத்தைக் காணலாம்.

முட்டைக்கோஸ் : ஆம், முட்டைக்கோஸ் கூட கொழுப்புக்களை வேகமாக கரைக்க உதவும். அதிலும் முட்டைக்கோஸ் சூப்பை வாரத்திற்கு 2 முறை குடித்து வந்தால், உடல் எடையை வேகமாக குறைக்கலாம். எப்படியெனில் இந்த சூப் செரிமான மண்டலத்திற்கு மிகவும் நல்லது. இதனால் நல்ல பலன் கிடைக்கும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg