Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாவங்கள், பிணிகளை நீக்கும் விரத வழிபாடு

In ஆன்மீகம்
Published: 11:06 GMT, Apr 26, 2016 |
0 Comments
1205
icon_com
This post was written by :
amma_jpg1_2517028g

பாவத்தினால் உண்டான பிணியை தலைதூக்கவிடாமல் செய்வதற்கு நோன்பு முறைகள் பலவற்றை தந்திருக்கிறது ஹிந்து தர்ம சாஸ்திரங்கள்.

நாள், திதி, நட்சத்திரம் முதலானவற்றை மையமாக வைத்து, கிருத்திகை, ஏகாதசி, சஷ்டி என்பன போன்ற விரதங்களை பரிந்துரைத்தது.

உணவுக் கட்டுப்பாட்டுடன் தெய்வத்தை மனதில் நிறுத்தி வழிபட, பாவம் அகலும். சிறுவர்கள், பெண்கள், முதியோர்கள் ஆகியோருக்கு விரதமே வேள்விக்குச் சமம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வரலட்சுமி நோன்பு, காரடையான் நோன்பு, துளசி பூஜை, பஞ்சாட்சர ஜபம் முதலான விரதங்கள் ஒட்டிக் கொண்டிருக்கும் பாவங்களைத் துடைக்க வல்லது.

பிணியின் உச்சகட்டம் தான் பாவத்தின் அடையாளம். தற்கால சூழலில், மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோய்களும் ஏராளம். பாவம் கண்ணுக்குப் புலப்படாது. ஆனால் நோயைக் கொண்டு பாவத்தை அறிய முடியும்.

இதனால் தான், பன்னிரண்டு மாதத்தில் உள்ள விரதங்களை கடைப்பிடிக்க வலியுறுத்துகிறது தர்ம சாஸ்திரங்கள். தினமும் நீராடி, கோயிலுக்குச் சென்று வணங்கி வந்தால் போதுமா? இதில் மன நிறைவு ஏற்படலாம். பாவம் போகாது. இதற்கு விரதங்களே வழிகாட்டுகின்றன.

விரதங்கள் அனைத்துமே புராணங்களில் உண்டு. விரதம் இருந்து தான் கணவனை மீட்டாள் சாவித்திரி. விரதம் மேற்கொண்டு தான் ஆதிசங்கரரைப் பெற்றெடுத்தனர் அவரின் பெற்றோர். விரத பலனாக குந்திதேவிக்கு குழந்தைகள் கிடைத்தனர். ராமரைப் பிரிந்த சீதை, அசோகவனத்தில் விரதமிருந்ததால் ராமருடன் சேர்ந்தாள். தவம் இருந்தே ஈசனை அடைந்தாள் பார்வதிதேவி.

வேதக் கல்வியால் கிடைக்கும் அத்தனை வளமும் நலனும் விரதத்தால் கிடைக்கும் என்கிறது புராணம். தை மாத சூரிய வழிபாடு, மாசி சந்திர வழிபாடு, பங்குனி ராம நவமி, சித்திரை சித்ரபுத்திர வழிபாடு, வைகாசியில் வைகாசி விசாகம். என பண்டிகையும் விரதமுமாக கலந்து தருகிறது புராணம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg