Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஈரானில் முதலீடுகளை மேற்கொள்ளவுள்ள தென் கொரியா

In வணிகம்
Updated: 13:58 GMT, Apr 26, 2016 | Published: 13:58 GMT, Apr 26, 2016 |
0 Comments
1264
This post was written by :

ஈரானில் துரிதமாக வளர்ச்சியடைந்து வரும் கப்பல் துறை மற்றும் துறைமுகங்களில் முதலீடு செய்ய விரும்புவதாக, தென் கொரியா தெரிவித்துள்ளது.

அண்மையில் ஈரான் – தென் கொரிய பொருளாதார மாநாட்டிற்காக ஈரானின் இஸ்ஃபஹன் நகருக்கு விஜயம் மேற்கொண்டிருந்த தென் கொரிய கடல்சார் நிறுவனத்தின் தலைவர் சங் கு கிம் தெரிவித்த கருத்தை மேற்கோள்காட்டி, ஈரானிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரான் மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகளில் உயர் திறன்களைக் கொண்டுள்ளது. கப்பல் கட்டுதல், கப்பல் பராமரிப்பு மற்றும் பழுது பார்த்தல், துறைமுகங்களை வர்த்தக செயற்பாடுகளுக்காக தயார்பபடுத்தல் என்பவை தொடர்பில் ஈரானுடன் சேர்ந்து கூட்டாக செயற்பட தென் கொரிய விரும்புகிறது என அவர் தெரிவித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அபிவிருத்தித் திட்டங்கள், அணைக் கட்டுகள் நிர்மானம், நீர் வளங்களை கட்டுப்படுத்தல் மற்றும் முகாமைத்துவம் செய்தல், சுகாதார துறை ஆகியவற்றில் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயற்பட்டு வருகின்றன. அடுத்து வரும் 5 ஆண்டுகளில், ஈரானில் 10 பில்லியன் டொலர்கள்வரை முதலீடு செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் சங் கு கிம் தெரிவித்ததாக ஈரானிய ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை அடுத்த மாதமளவில் தென் கொரிய ஜனாதிபதி Park Geun-hye  ஈரானுக்கு விஜயம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg