Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விரதம் இருத்தல் என்பது மூடநம்பிக்கையா?

In ஆன்மீகம்
Updated: 05:48 GMT, Apr 27, 2016 | Published: 05:48 GMT, Apr 27, 2016 |
0 Comments
1185
icon_com
This post was written by : Risha
viratham

விரதம் இருத்தல் என்பது மூடநம்பிக்கை எனவும் மத நம்பிக்கை என்றும் வெவ்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றது. ஆனால் விரதம் இருத்தல் என்பதில் இவ்விரு நம்பிக்கைகளுக்கு மேலாக விஞ்ஞான ரீதியான விளக்கமொன்று காணப்படுகிறது.

‘அன்னத்தை அடக்கியவன் ஐந்தையும் (கண், காது, மூக்கு, வாய், உடல்) அடக்குவான்’ என்பார்கள். இவைகளை கட்டுப்படுத்தும்போது, நம் மனம் ஞானத்தை தேடி செல்கிறது என்பதை அத்தனை தத்துவ ஞானிகளும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

நமது வயிறு 15 நாட்களுக்கு ஒருமுறையாவது காலியாக இருக்க வேண்டும். இதனையொட்டித்தான் அமாவாசை, பௌர்ணமி என விரதங்கள் எல்லாம் வரையறுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. விரதமிருப்பதால் வயிறு சுத்தமாகிறது. ஜீரண உறுப்புகள் சீராகிறது என்கிறார்கள் சித்த மருத்துவர்கள். இந்த அடிப்படையில்தான் எல்லா மதங்களிலும் விரதம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

மொத்தத்தில் சகல மார்க்கங்களும் விரதத்தை உடலையும், மனதையும் செம்மைப்படுத்தும் விடயமாகவே வழிநடத்தி வந்திருப்பதை அறியலாம்.

இல்லாதவர்களுக்கு கொடுத்து எல்லோருக்கும் எல்லாம் சென்றடைய வேண்டும் என்ற பொதுநலத்தையும் போதித்து வந்திருக்கிறார்கள். இன்னொரு முக்கியமான உண்மை என்னவாயின், எந்தவொரு விடயத்தையும் 48 நாட்கள் அதாவது ஒரு மண்டல காலத்துக்கு தொடர்ந்து செய்யும்போது, இயல்பாகவே அதற்கு நம் மனமும், உடலும் பழக்கப்பட்டுவிடுகின்றன என்பது நிரூபிக்கப்பட்ட உளவியல் உண்மை. உடல் நலம், மன நலம், பொது நலம் கலந்த விரதங்களை அதற்குள் உள்ள விஞ்ஞானத்தை புரிந்து பின்பற்றினால், இந்த உலகமே புதிதாய் மாறும் என்பதில் சந்தேகமில்லை.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg