Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிறப்பான வாழ்வு அருளும் குலதெய்வ வழிபாடு

In ஆன்மீகம்
Updated: 06:29 GMT, Apr 27, 2016 | Published: 06:25 GMT, Apr 27, 2016 |
0 Comments
1176
icon_com
This post was written by : Risha
201604261343564125_kula-deivam-viratham-doing-method_SECVPF

இந்துக்களை பொருத்தவரையில், ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் என குலதெய்வங்கள் காணப்படுவது வழமை. ஆனால் தங்களது குலதெய்வம் தொடர்பில் பலரும் அறிந்திருப்பதில்லை என்பதே உண்மை.

வாழ்வில் எவ்வித முன்னேற்றங்களும் இன்றி பலரும் தொடர்ந்து பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர். இவ்வாறு வாழ்வில் விருத்தியின்றி காணப்படுபவர்கள் தங்களது குலதெய்வத்தை அறிந்து விரதம் இருந்து வணங்கி வந்தால் வாழ்வில் படிப்படியாக முன்னேற்றம் காணலாம் என ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

அதன்படி பங்குனி உத்தரத்திற்கு முந்தைய நாளில் இருந்து விரதம் இருந்து நமது குல தெய்வ கோவில்களுக்கு சென்று வழிபட வேண்டும். அத்துடன், நம்மால் ஆன உதவியை வயதானவர்களுக்கு செய்வதன் மூலம் பெரியவர்களின் பரிபுரண ஆசிகளும் நம்மை வாழ வைக்கும்.

அதுமட்டுமின்றி, குலதெய்வ வழிபாட்டின் மூலம் திருமணமாகாதவர்களுக்கு திருமணம் அமைவது, குழந்தை வரம் பெறுவது, தீராத நோய்களுக்கு பரிகாரம் பெறுவது, கல்வி, தொழில் விருத்தி கிடைப்பது, வழக்குகளில் நீதி கிடைப்பது முதலிய பயன்கள் ஏற்படும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg