Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தீய சக்திகளை அழிக்கும் திருச்செந்தூரான்

In ஆன்மீகம்
Updated: 06:46 GMT, Apr 27, 2016 | Published: 06:45 GMT, Apr 27, 2016 |
0 Comments
1213
icon_com
This post was written by : Risha
13

தீய சக்தியை மட்டுமின்றி, மனிதர்கள் மனதில் இருக்கும் அளவுக்கு மீறிய ஆசை, கோபம், காமம், ஆகியவற்றையும் அழிக்கக் கூடிய சக்தி திருச்செந்தூர் திருத்தலத்திற்கு உள்ளது. இது போன்ற சூழலில் இருப்பவர்கள் திருச்செந்தூருக்கு ஆண்டுக்கு ஒரு முறை சென்று வழிபட்டால் மன அமைதி கிட்டும்.

இயல்பிலேயே உங்களுக்கான குலதெய்வங்களை அறிந்திராதவர்கள் திருச்செந்தூர் முருகனை குல தெய்வமாக ஏற்றுக் கொள்ளலாம். திருச்செந்தூர்- குருவுக்கும், செவ்வாய்க்கும் உரிய தலமாக விளங்குகிறது. எனவே இத்தலம் குலதெய்வத்துக்கு உரிய கோவிலாக கருதப்படுகிறது.

இது ஒரு கால ரகசிய நுட்பம். பக்தர்கள் அனைவரும், இந்த விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும். உங்கள் வாழ்வில் ஏற்படும் அத்தனை தடங்கல்களையும் தாண்டி, நிம்மதியும், மகிழ்ச்சியும் நிறைந்த ஒரு வாழ்க்கை அமைய திருச்செந்தூர் முருகனை குலதெய்வமாக வணங்கலாம்.

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று கூறுவர். ஆனால் திருச்செந்தூரில் நீர்நிலைக்கு (கடல்) அருகில் உள்ள திருத்தலத்தில் முருகப் பெருமான் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். இது இந்த கோவிலுக்கு தனிச் சிறப்பை அளிக்கிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg