Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நினைத்தது நிறைவேறும் பிரதோஷகால ஸ்லோகம்

In ஆன்மீகம்
Updated: 07:00 GMT, Apr 27, 2016 | Published: 06:59 GMT, Apr 27, 2016 |
0 Comments
1215
icon_com
This post was written by : Risha
Tamil-Daily-News-Paper_5881572961808

சிவபெருமானுக்குரிய விரதங்களுள் மிகவும் விசேடமானது பிரதோஷ விரதம். தோஷம் என்றால் குற்றம் என்றும், பிரதோஷம் என்றால் குற்றமற்றது என்றும் பொருள் தரும்.

ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை என்னும் இரு காலங்களிலும், திரயோதசி திதியில் வருவது பிரதோஷ தினமாகும். இந்த வேளையில் சிவபெருமானை வழிபாடு செய்வதே இந்த விரதத்தின் நோக்கம்.

பிரதோஷ வேளையில் இறைவனை வழிபடுவதால் நமது முற்பிறவி குற்றங்கள், சகல தோஷங்கள் நீங்கி நலம் கிடைக்கும். பாவம் விலகி புண்ணியம் சேரும். வறுமை அகலும். பயம், மரண வேதனை நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மகப்பேறு பெறுவர். பிறவி ஒழித்து முக்தி பேற்றினை அடைவர். கல்வியில் மேன்மை பெறுவார்கள் என்பது முன்னோர் வாக்கு.

இந்த பிரதோஷ நேரத்தில்,
ஸித்தயோகீ மஹர்ஷிச்ச ஸித்தார்த்தஹ் ஸித்த ஸாதக
பிக்ஷூச்ச பிக்ஷூரூபச்ச விபனோம்ருது ரவ்யய

என்ற ஸ்லோகத்தை 18 முறை காலை, மாலை – இருவேளையும் பாராயணம் செய்து வந்தால் சிவன் அருள் கிட்டி நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg