Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரச ஊழியர்கள்- ஊடகவியலாளர்களுக்கு மொபிடெல்லின் விசேட சலுகை

In வணிகம்
Updated: 07:41 GMT, Apr 27, 2016 | Published: 07:41 GMT, Apr 27, 2016 |
0 Comments
1128
icon_com
This post was written by : Risha
Mobitel_logo

இலங்கையின் தேசிய கையடக்க தொலைபேசி சேவை வழங்குனரான ஸ்ரீலங்கா ரெலிகொம் மொபிடெல் நிறுவனமானது தற்பொழுது அரச ஊழியர்கள், ஊடகவியலாளர்கள், சமுர்த்தி பயனாளிகள் மற்றும் மூத்த பிரஜைகளுக்கு மாதாந்த கட்டண அடிப்படையில் ஸ்மார்ட் போன்கள் மற்றும் மொபிடெல் பெக்கேஜ்களை வழங்க முன்வந்துள்ளது.

தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் கட்டமைப்பு தொடர்பான அமைச்சின் எண்ணக்கருவின் அடிப்படையில் அமைச்சர் ஹரிண் பெர்னான்டோவின் வழிகாட்டலின் கீழ் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து இலங்கையர்களுக்கும் நவீன தொழில்நுட்ப வசதிகளை அனுபவிப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு உந்து சக்தியாக இச் செயற்றிட்டம் அமைந்துள்ளது.

அதேவேளை, மொபிடெல் நிறுவனமானது கடந்த 2008ஆம் ஆண்டு அரச ஊழியர்களுக்கு ‘மொபிடெல் உபஹார’ சேவையினை அறிமுகப்படுத்தி நாட்டின் தொடர்பாடல் துறையில் மிகப் பெரியதோர் புரட்சியினை ஏற்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg