Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கட்டார் நாணயமாற்று இல்ல இலங்கை பணியாளர்களை கௌரவித்த கொமர்ஷல் வங்கி

In வணிகம்
Updated: 08:09 GMT, Apr 27, 2016 | Published: 08:09 GMT, Apr 27, 2016 |
0 Comments
1194
icon_com
This post was written by : Risha
6c33fe5fb03d08388a222b07b68a5203

கட்டாரில் உள்ள நாணயமாற்று இல்லங்களில் பணிபுரியும் இலங்கையர்களை கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் தோஹாவில் கொமர்ஷல் வங்கியினால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

வங்கியின் நாணயமாற்று சேவையை அங்கு ஊக்குவிப்பதில் அவர்கள் வழங்கிய பங்களிப்பை கௌரவிக்கும் வகையிலேயே இந்த கௌரவிப்பு இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வில் சுமார் 200இற்கும் அதிகமான இலங்கையர்கள் பங்கேற்று இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் வெளிநாட்டு பணப்பரிமாற்றலுக்கான முக்கிய சந்தையாகத் திகழும் கட்டாரில் கிட்டத்தட்ட ஒரு இலட்சத்து 25 ஆயிரம் இலங்கையர்கள் பணிபுரிகின்றனர். இலங்கைக்கு வெளிநாட்டு வருமானத்தைக் கொண்டு வரும் பிரதான ஐந்து நுழைவாயில்களில் ஒன்றாகவும் இது கருதப்படுகின்றது.

அங்கு கணிசமான அளவு புலம்பெயர் தொழிலாளர்கள் காணப்படுகின்றனர். இந்த தொழில்படைக்குத் தேவையான பணம் அனுப்பும் சேவைகளை வழங்குவற்காக 20 பணப்பரிமாற்ற இல்லங்கள் கட்டாரில் நிறுவப்பட்டுள்ளன. கொமர்ஷல் வங்கி நான்கு வர்த்தக ஊக்குவிப்பு அதிகாரிகளையும் அங்கு சேவையில் அமர்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg