Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பெண்களின் அழகை மெருகூட்டும் ஆயுர்வேத அழகுக் குறிப்புகள்

In
Updated: 09:06 GMT, Apr 27, 2016 | Published: 09:06 GMT, Apr 27, 2016 |
0 Comments
1174
icon_com
This post was written by : Risha
news_17942

இளம் பெண்கள் தம்மை அழகுப்படுத்தி கொள்ள, பல அழகுசாதனப் பொருட்களை வாங்குவதில் அதிக பணத்தை செலவு செய்வது வாடிக்கையாகிவிட்டது. இருந்த போதிலும், இவற்றைப் பயன்படுத்துவதால், அவர்கள் தங்களை முழுமையாக அழகுப்படுத்திக் கொள்கிறார்களா? என்பது சந்தேகத்திற்குரியது. ஆகவே, பெண்கள் தங்களது அழகை மெருகூட்டிக்கொள்ள சில இயற்கையான ஆயுர்வேத அழகுக் குறிப்புகள் இதோ!

தேனையும், இஞ்சியையும் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, தினமும் காலையில் பல் துலக்குவதற்கு முன், முகத்தில் தடவ வேண்டும். இது சருமத்திலுள்ள சுருக்கங்களை தடுப்பதற்கு மிகவும் சிறந்தது.

இரத்த ஒட்டத்தை அதிகப்படுத்தி, சருமத்தை இறுகச் செய்வதற்கு ஆலிவ் ஆயில் மசாஜ் மிகவும் பயனுள்ளதாகும். அதற்கு தினமும் ஆலிவ் ஆயிலைப் பயன்படுத்தி மசாஜ் செய்யுங்கள். ஆன்டி-க்ளாக் முறையில் மசாஜ் செய்ய வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஆப்பிளை மெல்லிய துண்டுகளாக வெட்டி, அவற்றை சருமத்தில் பாதிக்கப்பட்ட இடத்தில் தேய்த்து, 10 நிமிடத்திற்குப் பின்னர் வெந்நீரில் கழுவ வேண்டும். இது சருமத்தின் எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்த உதவும்.

மஞ்சள், சிறிதளவு பச்சை பால், எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி வந்தால், சருமத்தில் ஏற்படும் பழுப்பு நிற தடயங்கள் நீங்கிவிடும். தேன், எலுமிச்சை சாறு மற்றும் வெஜிடேபிள் ஆயில் ஆகியவற்றை சேர்த்து கலவை செய்யுங்கள். இந்த பேஸ்டை உலர்ந்த சருமத்தில் தடவி, 10-15 நிமிடத்திற்குகுப் பின்னர் கழுவவும். இது உலர்ந்த சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ள மிகவும் சிறந்தது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg