Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆரோக்கியமான மரவள்ளிக்கிழங்கு தோசை

In
Updated: 09:45 GMT, Apr 27, 2016 | Published: 09:42 GMT, Apr 27, 2016 |
0 Comments
1234
This post was written by : Risha

தேவையான பொருட்கள்

புழுங்கலிரிசி – 1 கப்
மரவள்ளிக் கிழங்கு – சிறியதாக 1
காய்ந்த மிளகாய் – 6
சீரகம் – 1 கரண்டி
பெருங்காயம் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:
மரவள்ளிக்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி, மூன்று முறை பால் போக நன்குக் கழுவிக் கொள்ளவும். புழுகலரிசியை கழுவி, 2 மணிநேரம் ஊற வைக்கவும். மிளகாய், உப்பு, பெருங்காயம், சீரகம், ஆகியவற்றை அரைத்து, அத்துடன் கிழங்கையும் சேர்த்து அரைக்கவும். பின்னர் ஊரிய அரிசியையும் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

ஆட்டிய மாவை தோசை ஊற்றும் பக்குவத்தில் வைத்துக் கொண்டு மெல்லிய தோசைகளாக ஊற்றி வெந்ததும் திருப்புவிட்டு, எண்ணெய்விட்டு சிவக்க வெந்ததும் எடுக்கவும். எல்லோரும் விரும்பி உண்ணக் கூடிய ஆரோக்கியமான மரவள்ளி தோசை தயார்.!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg