Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தனது பங்குகளை பணியாளர்களுக்கு வழங்கும் சொபானி

In வணிகம்
Updated: 10:33 GMT, Apr 27, 2016 | Published: 10:33 GMT, Apr 27, 2016 |
0 Comments
1240
This post was written by : Risha

அமெரிக்க யோகட் தயாரிப்பு நிறுவனமான சொபானி, தனது பத்து வீத பங்குகளை தனது பணியாளர்களுக்கு வழங்கவுள்ளதாக நிறுவனத்தின் நிறுவனர் தெரிவித்துள்ளார்.

பங்குகளை தனது ஊழியர்களுக்கு வழங்கும் நடவடிக்கையானது தொழில்நுட்ப நிறுவனங்களில் சாதாரணமாக இடம்பெறும் அதேவேளை, உணவு நிறுவனம் ஒன்றின் பங்குகளை வழங்குதல் என்பது வழக்கத்திற்கு மாறாக இடம்பெற்றுள்ளது.

இந்த பங்குகள், உலகளாவிய ரீதியில் இயங்கும் சொபானி நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 2 ஆயிரம் பணியாளர்களிடையே பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது பணியாளர்கள் குறித்த நிறுவனத்தில் பணியாற்றும் காலத்தை பொறுத்து பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இவ்வாறு பகிர்ந்தளிக்கப்படும் சில பங்குகளின் மதிப்பு பல மில்லியன் டொலர்களாக காணப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg