Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘மனசுக்குள் ஒரு மழைச்சாரல்’ – ட்ரெயிலர் வெளியீடு

In
Updated: 13:12 GMT, Apr 27, 2016 | Published: 13:10 GMT, Apr 27, 2016 |
0 Comments
1378
icon_com
This post was written by : Varothayan

உதயரூபனின் கதை மற்றும் தயாரிப்பில் யாழ்ப்பாணத்தில் இருந்து உருவாகிவரும் திரைப்படம் ‘மனசுக்குள் ஒரு மழைச்சாரல்’. இப்படத்தை வினோதன் இயக்குகின்றார். ஒளிப்பதிவு ராஜ். இசை சுதர்சன்.

அண்மையில் இப்படத்தின் இசை வெளியீடு பிரமாண்டமாக இடம்பெற்றிருக்கும் நிலையில், படத்தின் ட்ரெயிலரை தற்போது படக்குழுவினர் வெளியிட்டிருக்கின்றனர். இப்படத்தில் ஜெராட், மிதுனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருப்பதோடு மதிசுதா, லக்ஷ்மன், வாணி, தர்ச உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

படத்தை பற்றி படக்குழுவினர் மேலும் தெரிவிக்கையில், யுத்தம் முடிவுற்ற பின்னர் எமது மொழியினை தாங்கி வெளி வரும் முதல் ஈழத்து திரைப்படம் ‪‎மனசுக்குள்_ஒரு_மழைச்சாரல்‬. என்பதனை கூறிக்கொள்வதில் பெருமை அடைகின்றோம்.

ஈழ சினிமா வரலாற்றில் முதன்முறையாக யாழ்ப்பாணத்திலிருந்து ஈழத்தில் முற்றிலும் எமது சுயத்தை இழக்காமலும் இரவல் சினிமாக்களை சாராத வகையிலும் வெளிவர தயாராகிறது. எமது “மனசுக்குள் ஒரு மழைச்சாரல்” திரைப்படத்தின் 2K ஒளித்தரத்திலான மெருகூட்டப்பட்ட திரை முன்னோட்டத்தை வெளியிட்டு வைப்பதில் பெருமகிழ்வடைகின்றோம்.

மனசுக்குள் ஒரு மழைச்சாரல் முழு நீள திரைப்படம், DI Colour Grading, DTS 5.1 mixing, DCP என்ற நவீன தொழில் நுட்பங்களை தன்னகத்தே சுமந்து வரும் யாழ்ப்பாணத்தின் முதல் படைப்பு இதுவாகும். எமது தனித்துவ படைப்புக்கு நீங்கள் அளித்துவரும் அதரவுக்கு எமது நன்றிகள்

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg