Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாரிய வங்கிக் கடன் மோசடி: பட்டியல் 9ஆவது இடத்தில் கிங்ஃபிஷர்

In வணிகம்
Updated: 07:34 GMT, Apr 28, 2016 | Published: 07:24 GMT, Apr 28, 2016 |
0 Comments
1119
icon_com
This post was written by : Risha
Kingfisher_Tail_Parade_A321_VT-KFZ_A330_VT_VJK_VT-VJP_A321_VT-KFS_Logo

வங்கிக் கடன்களை பெற்று மிகப் பெரிய அளவில் பணத்தை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்த நபர்களின் பட்டியலை நியூஸ் லாண்டரி என்ற இணையதளம் வெளியிட்டுள்ளது.

மிக அதிக அளவில் பணத்தை திருப்பி செலுத்தாத நிறுவனமாக விளங்கும் இரும்பு உருக்கு துறையில் உள்ள உஷா இஷ்பட் இந்த பட்டியலில் முதலாவது இடத்தில் உள்ளது. உஷா இஷ்பட் நிறுவனம் மொத்தம் 16,911 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாமல் உள்ளது. அதேவேளை இந்த பட்டியலில் நான்கு இரும்பு உருக்கு நிறுவனங்கள் காணப்படுகின்றன.

இந்நிலையில், வங்கிகளின் கடனை வாங்கி திருப்பி செலுத்தாத நிறுவனங்கள் பட்டியலில் கிங்பிஷர் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. கிங்பிஷர் நிறுவனம் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு 3 ஆயிரத்து 259 கோடி ரூபாய் திருப்பி செலுத்தாததை மட்டுமே இந்த இணையதளம் சுட்டிக்காட்டியுள்ளது.

கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் கடன் விவகாரம் இப்போது வழக்கில் உள்ள நிலையில், கடனை திருப்பி செலுத்தாதவர்கள் பெயர்களை அறிவிக்காமல் இருப்பது ஏன் என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg