Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விநாயகனுக்குரிய விரதங்களும் அனுட்டான முறைகளும்

In ஆன்மீகம்
Updated: 07:58 GMT, Apr 28, 2016 | Published: 07:57 GMT, Apr 28, 2016 |
0 Comments
1119
This post was written by : Risha

வைகாசி வளர்பிறை : முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி ஒரு வருடம் செய்வது

செவ்வாய் விரதம் : ஆடிச் செவ்வாய் தொடங்கி ஒவ்வொரு செவ்வாயும் ஓராண்டு வரை செய்வதால் செவ்வாய் தோஷம் விலகிவிடும் என்பது நம்பிக்கை.

சதுர்த்தி விரதம் : பிரதி மாதம் சதுர்த்தி அன்று விரதமிருந்து வந்தால், காரியத்தடைகள் நீங்கும்.

குமாரசஷ்டி விரதம் : கார்த்திகை மாத தேய்பிறை பிரதமை திதி அன்று முதல் மார்கழி வரை பிறை சஷ்டி வரை 21 தினங்கள் செய்வர். 21 இலைகள் உடைய மஞ்சள் நூலை கையில் கட்டிக்கொள்வர். பிள்ளை செல்வம் குடும்ப வளத்திற்காக செய்யப்படுகின்ற இந்த விரத்திற்குப் பிள்ளையார் நோன்பு என்றே பெயர் உண்டு.

தூர்வா கணபதி விரதம் : கார்த்திகை மாத வளர்பிறை சதுர்த்தி அன்று விநாயகரை அருகம்புல் ஆசனத்தில் அமர்த்தி செய்வது இதன் மூலம் வம்சவிருத்தி ஏற்படும்.

சித்தி விநாயகர் விரதம் : புரட்டாசி வளர்பிறை 14ஆம் திதியான சதுர்த்தசி திதியில் விரதம் இருப்பது இதன் மூலம் எதிரிகள் விலகுவர்.

தூர்வாஷ்டமி விரதம் : புரட்டாசி வளர்பிறை அஷ்டமி அன்று தொடங்கி விநாயகரை ஓராண்டு அருகம்புல்லால் அர்ச்சித்து வந்தால் உடல் வலிமை உண்டாகும்.

விநாயக நவராத்திரி : ஆவணி வளர்பிறை சதுர்த்தியை தொடர்ந்து ஒன்பது நாட்கள் செய்வது விநாயக நவராத்திரி.

வெள்ளிப்பிள்ளையார் விரதம் : ஆடி, தை வெள்ளிக்கிழமைகளில் விநாயகரை நேர்ந்து கொண்டு விரதம் இருந்து நாம் கோருகின்ற பலனுக்கு ஏற்ப துதிகள் பாடி பிரசாதம் படைத்து வணங்குதல். இது பெண்கள் செய்யும் விரத பூஜை.

செவ்வாய் பிள்ளையார் விரதம் : ஆடி மாத செவ்வாயன்று செய்யப்படுவது. இந்த விரத பூஜையைச் செய்யும் பெண்கள் வீட்டிலிருந்து பச்சரிசியைக்கொண்டு வந்து பொது இடத்தில் இடித்து மாவாக்கி தேங்காய் துருவல் சேர்த்து உப்பின்றி கொழுக்கட்டை அடை செய்து விநாயகருக்கு படைப்பர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg