Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நோய்களை கட்டுப்படுத்தும் வோட்டர் தெரபி

In
Updated: 09:17 GMT, Apr 28, 2016 | Published: 09:13 GMT, Apr 28, 2016 |
0 Comments
1222
This post was written by : Risha

பல்வேறு உடல் உள பிரச்சினைகளுக்கு தீர்வுதருவதாக வோட்டர் தெரபி அமைந்துள்ளது. காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும், வெறும் வயிற்றில் 1.5 லீற்றர் தண்ணீரைக் குடிக்க வேண்டும். அதற்குப் பின் முகத்தைக் கழுவ வேண்டும். இதற்குப் பெயர் தான் வாட்டர் தெரபி.

இந்த வோட்டர் தெரிபியின் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பும், குடித்த 1 மணி நேரத்திற்கு பின்பும் எதுவும் சாப்பிடக் கூடாது. மேலும் இந்த வாட்டர் தெரிபியை கடைபிடிப்பவர்கள், தண்ணீரைக் குடிப்பதற்கு முந்தைய இரவில் மது அருந்தக்கூடாது.

வோட்டர் தெரபியின் நன்மைகள்:
மன அழுத்தத்திலிருந்து விடுதலை கிடைக்கும்.
நாள் முழுவதும் உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
உடலில் உள்ள நச்சுத் தன்மையை சிறுநீர் மற்றும் இனிப்பு ஆகியவற்றின் மூலம் வெளியேற்ற உதவுகிறது.
உடல் ஆரோக்கியத்தையும், தோலில் மினுமினுப்பையும் வழங்குகிறது.
உடல் சூட்டைத் தணிக்கிறது.
உடலில் இருக்கும் தேவையில்லாத பொருள்களை எளிதாக வெளியேற்ற வாட்டர் தெரபி உதவுகிறது.

மேலும் நான்கே வாரங்களில் உயர் இரத்த அழுத்தத்தையும் இது கட்டுப்படுத்துகின்றது. அத்துடன், தலைவலி, உடல்வலி, சிறுநீரகப் பிரச்சனைகள், சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்கள், மூட்டுவலி, வயிற்றுப்போக்கு, வயிற்றுப்போக்கு, மூலம், நீரழிவு நோய்கள், கண் சம்பந்தப்பட்ட நோய்கள் போன்றவற்றையும் இந்த வாட்டர் தெரபி குணப்படுத்துகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg