Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தந்தூரி சிக்கன்

In
Updated: 09:54 GMT, Apr 28, 2016 | Published: 09:54 GMT, Apr 28, 2016 |
0 Comments
1191
icon_com
This post was written by : Risha
thanduri

தேவையான பொருட்கள்

 

கோழி தொடை        –  4

எண்ணெய்            – 1/2   லிட்டர்

ஜிலேபி பவுடர்        – சிறிது

மைதா மாவு          – 50 கிராம்

கடலை மாவு         – 50 கிராம்

சில்லி சிக்கன் பவுடர்  – 50 கிராம்

எலுமிச்சை பழம்      – 1

இஞ்சி,பூண்டு விழுது   – 2 கரண்டி

உப்பு         – தேவையான அளவு

முட்டை     –  1  (வெள்ளை கரு மட்டும்)

 

செய்முறை:-

  • கோழியை சுத்தம் செய்து அதில் கத்தியை வைத்து அங்கும் இங்குமாக சிறிது கீறல் போடவும்.(கறியில் மசாலா நன்கு சேர்வதற்காக)
  • ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, கடலை மாவு, சில்லி சிக்கன் பவுடர், இஞ்சி,பூண்டு விழுது, முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
  • இந்த கலவையில் எலுமிச்சை சாற்றை பிழிந்து அத்துடன் கலருக்காக சிறிது ஜிலேபி பவுடரையும் சேர்த்து அனைத்தும் ஒன்று சேர  நன்கு கலக்கவும்.
  • இந்த கலவையில் கறியை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
  • பின்பு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றவும்.
  • எண்ணெய் நன்கு கொதிக்கும் போது கறியை அதில் போட்டு நன்கு வேக விடவும்.
  • கறி கோழி வேகும் போது திருப்பி திருப்பி போட வேண்டும்.
  • அடுப்பு குறைந்த அளவு வெப்பத்தில் இருக்க வேண்டும்.
  • கறி  நன்கு வெந்து பொன்னிறமாக வந்தவுடன் இறக்கிவிடவும்.
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg